வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே!

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே!
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே!

1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமான ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்!- வாதை

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு, வசனம் உண்டு, அன்றாட வெற்றி உண்டு!- வாதை

3. கர்த்தருக்குள் நம்பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல், உறுதியுடன், அதிகமாய் செயல்படுவோம்!- வாதை

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கி விடுவார்
ஆவி ஆத்துமா சாரமெல்லாம் குற்றமின்றிக் காத்திடுவார்!- வாதை

5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கிக் காத்திருப்போம்!- வாதை

6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதைச் செய்திடுவார்!- வாதை

7. ஆற்றல் அல்ல, சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்!- வாதை



vathai unthdhan kudaraththai anukathu makane!

vathai unthdhan kudaraththai anukathu makane!
pollappu neridathu neridathu makale!

1. unnadhamana karthdharaiye uraivitamakkik konday
adaikkalamana aantavanai aathayamakkik konday!- vathai

2. aaddukkuddi irathdhaththinal saththanai jayiththu viddom
aavi undu, vasanam undu, anrata vetrri undu!- vathai

3. karthdharukkul nambadukal oru nalum vanakathu
asaiyamal, uruthiyutan, athikamay seyalpaduvom!- vathai

4. azhaithdhavaro unmaiyullavar parisuthdhamakki viduvar
aavi aaththuma saramellam kurraminrik kaththiduvar!- vathai

5. nammudaiya kudiyiruppu paralokaththil undu
varappokum iradchakarai ethir nokkik kaththiruppom!- vathai

6. arpamana aarampaththai achaddai pannathe
thotangkinavar mudiththiduvar sonnathais seythiduvar!- vathai

7. aarral alla, chakthi alla aaviyinal aakum
sornththidamal nanmai seyvom thunaiyalar mun selkirar!- vathai